மஹர சிறைக்குள் வன்முறை வெடிக்க காரணம் என்ன?

Report Print Vethu Vethu in சமூகம்
498Shares

மஹர சிறைச்சாலையில் கொரோனா தொற்றிய கைதிகள் மற்றும் சாதாரண கைதிகளை ஒன்றாக தடுத்து வைத்தமையே இந்த மோதல் நிலைக்கு காரணம் என உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் பிரதான செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகள் 180 பேர் சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டதனை தொடர்பில் அவர்களை சாதாரண கைதிகளுடன் சேர்க்க வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனை கருத்திற்கொளள்ளாமையினால் கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடை மோதல் ஏற்பட்டுள்ளதனை அறிந்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து கைதிகளை பார்வையிட உறவினர்கள் வருவதற்கு தடை விதிககப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உணவு பிரச்சினையும் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் நான்கு நாட்களாக வெலிக்கடை சிறைச்சாலை கூரையின் மீது ஏரி கைதிகள் சிலரின் கோரிக்கைகள முன்வைத்து எதிர்ப்பு வெளியிட்டு வருவதனை ஒருவரும் கண்டுக்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 9 பேர் உயிரிழந்ததுடன் 70இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.