பொறுப்பேற்கப்படாத கொவிட் சடலங்களை அரசாங்க செலவில் தகனம் செய்யத் தீர்மானம்

Report Print Kamel Kamel in சமூகம்

உறவினர்களினால் பொறுப்பேற்கப்படாத கொவிட் சடலங்களை அரசாங்க செலவில் தகனம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக மரணித்த உறவினர்களினால் சடலத்தை பொறுப்பேற்றுக்கொள்ளாத சடலங்கள் அனைத்தையும் அரசாங்க செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் காரணமாக மரணித்தவர்களின் சில சடலங்கள் அரசாங்க வைத்தியசாலைகளின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சடலங்களை அரசாங்கத்தின் செலவில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி எரிக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான செலவுகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வழங்கப்பட வேண்டுமென, நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.