இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவு

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் நான்கு கொவிட் மரணங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கையில் கொவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளது.

1. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவர் கடந்த 29ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் காரணமாக ஏற்பட்ட கிருமித் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

2. கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர், கடந்த 29ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு என்பனவற்றினால் மரணம் சம்பவித்துள்ளது.

3. ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 93 வயதான பெண் ஒருவர் கடந்த 28ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் இரத்தம் விசமாகிய காரணத்தினால் இவர் உயிரிழந்துள்ளார்.

4. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான ஆண் ஒருவர் தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளி என அடையாளம் காணப்பட்டதன் பின்னர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 30ம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொவிட் மற்றும் சுவாசப்பை பிரச்சினையினால் இவர் உயிரிழந்துள்ளார்.சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களிற்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் கொவிட் மரணங்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.