இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

Report Print Kamel Kamel in சமூகம்
277Shares

கொவிட்-19 நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இன்றைய தினம் இரண்டு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

1. சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் 30ம் திகதி சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார். கொவிட் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.

2. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் 30ம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட், நியூமோனியா மற்றும் ஒவ்வாமை காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த உயிரிழப்பு விபரங்கள் வெளியிடப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.