கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியாது! மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்
195Shares

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியாது என சுகாதார அமைச்சு, இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேலா குணவர்தன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முடிவில் மாற்றமில்லை என்பதால், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைவரிடனதும் சடலங்களை தகனம் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் இன்னும் இரண்டு மாதங்களில் பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது, இதன்போது இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் முறையை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே சுகாதார அமைச்சுக்கு அறிவித்திருந்தது.

இது மதம் சம்பந்தமான உரிமைகளை அல்லது நம்பிக்கைகளை பாதிப்பதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தது.

மரணத்திற்கான காரணம் குறித்த உறுதியான ஆதாரங்களை வழங்காமலும், குடும்ப உறுப்பினர்களுக்கு இறுதி சடங்குகளைச் செய்ய வாய்ப்பளிக்காமலும், இறந்த உடல்களை கட்டாயமாகவும் விரைவாகவும் தகனம் செய்த சம்பவங்கள் மத சுதந்திரத்தை மீறும் செயல்களாகும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.

சில சந்தர்ப்பங்களில், இந்த இறந்த உடல்கள் (ஜனாஸாக்கள்) தகனத்திற்கு முன்னர் வீடுகளில் இருந்து பலவந்தமாக அகற்றப்பட்டதாகவும் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.