மருத்துவப் பீடத்தின் மற்றுமொரு மாணவிக்கும் கொரோனா தொற்று

Report Print Steephen Steephen in சமூகம்

காலி - கராப்பிட்டிய மருத்துவப் பீடத்தின் மற்றுமொரு மருத்துவ மாணவிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் மருத்துவர் தெனுர கே.சிங்காராச்சி தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவி மருத்துவப் பீடத்தில் இறுதியாண்டில் கற்று வருகிறார்.

இந்த மாணவிக்கு இதற்கு முன்னர் கொரோனா தொற்றிய மாணவி முதலாவது தொற்றாளர்.

மருத்துவப் பீடத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பீடாதிபதி பேராசிரியர் வசந்த தேவசிறி, மருத்துவப் பீடத்தின் நடவடிக்கைகளை சுகாதார சட்டத்திட்டங்களுக்கு அமைய முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். மாணவர்களை விரிவுரைகளுக்கு அழைப்பதில்லை.

மருத்துவப் பயிற்சிகளில் ஈடுபடுத்துவதில்லை. இரண்டு தினங்களுக்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. விடுதிகளில் உள்ள மாணவர்கள் அங்கேயே இருக்கின்றனர்.

கவனமாக இருப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. செய்ய முடிந்த விரிவுரைகள் மாத்திரம் இணையம் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

எதிர்வரும் திங்கட் கிழமை மீண்டும் வழமைபோல் விரிவுரைகளை நடத்த முடியும் எனக் கூறியுள்ளார்.


You May Like This Video...