ஹட்டனில் இரண்டு தோட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு பிரிவுகள்

Report Print Steephen Steephen in சமூகம்

ஹட்டனில் இரண்டு பிரதேசங்கள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த இரண்டு பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அம்பகமுவை சுகாதார அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கினிகத்தேன பிளேக்வோட்டார் தோட்டத்தின் மேற்பிரிவு மற்றும் ஹோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவின் தட்டகெலே தோட்டத்தின் கீழ் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தோட்டங்களுக்கு செல்வது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

பிளேக்வோட்டர் தோட்டத்தின் மேற்பிரிவில் 15 கொரோனா தொற்றாளர்களும், தட்டகெலே தோட்டத்தின் கீழ் பிரிவில் 7 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.