வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர்களால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்

Report Print Vethu Vethu in சமூகம்
1318Shares

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் இருந்த இலங்கையர்கள் சிலர் இன்று ஓமான் மஸ்கட் நகரத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இன்று காலை 7.40 மணியளவில் ஓமான் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கைக்கு 54 பேர் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறு வந்த பயணிகள் 20 பேர் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு தங்களிடம் பணம் இல்லை என கூறி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வைத்திய ஆய்வகத்திற்கு உட்படுத்தியவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த பயணிகளை நாட்டுக்கு அழைத்து செல்வதற்கு முன்னரே PCR பரிசோதனைக்கு உட்படுத்த தேவையான பணத்தை ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த பயணிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

You My Like This Video