கொரோனா பரவல் காரணமாக நாட்டின் மேலும் இரண்டு இடங்களில் மக்களின் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அம்பகமுவ மருத்துவ அதிகாரி பிரிவுக்குள் வரும் இரு இடங்களே மக்கள் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இதன்படி வட்டவளை பொது சுகாதார அதிகாரி பிரிவின் கீழ்வரும் வெளிஓய டலுகல்ல கீழ்ப்பிரிவு கினிகத்தனை பொது சுகாதார அதிகாரி கீழ் வரும் கெனில்வத் மேல்ப்ளெக் வோட்டர் ஆகியனவே பொதுமக்களின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாட்டு விதிக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
அம்பகமுவ மருத்துவ அதிகாரி மருத்துவ அதிகாரியின் தகவலின்படி மேல் ப்ளெக்வோட்டர் பகுதியில் இருந்து 15 தொற்றாளர்களும் வெளிஓய டலுகல்ல பிரிவில் 27 கொரோனா தொற்றாளர்களும் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.