பொகவந்தலாவை - செல்வகந்தை தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
குறித்த தொற்றாளி கடந்த மாதம் 21 ஆம் திகதியன்று கொழும்பிலிருந்து தனது வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இந்தநிலையில் 30 ஆம் திகதியன்று இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
இதனையடுத்து அவர் ஹம்பாந்தோட்டை சுயதனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த தொற்றாளி 66 அகவைக்கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.
இதுவரையில் பொகவந்தலாவை பொது சுகாதார காரியாலய பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.