குருநாகல் பகுதியில் களஞ்சியத்தில் பணியாற்றும் 11 தொழிலாளர்கள் கொரோனா தொற்று!

Report Print Ajith Ajith in சமூகம்
58Shares

குருநாகல் மஹாவீதி பகுதியில் உள்ள தரையோடு களஞ்சியத்தில் பணியாற்றும் 11 தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

பொது சுகாதார ஆய்வாளர் சங்க செயலாளர் எம்.பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே குறித்த களஞ்சியத்தில் ஒருவர் தொற்றாளியாக கண்டறியப்பட்டார்.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஏனையோருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட போதே 11 தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதுவரையான காலப்பகுதியில் குருநாகல் மாவட்டத்தில் ஒரு இடத்திலிருந்து கண்டறியப்பட்ட அதிகமான நோயாளிகளின் எண்ணிக்கை இதுவாகும் என்று பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குருநாகல் உள்ள மஹாவீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மொத்தம் 42 பேர் இன்று கொரோனா தொற்றாளர்களாக கண்றியப்பட்டுள்ளளதாக பாலசூரிய தெரிவித்துள்ளார்