வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரெவி” புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இடைவிடாது கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இதன்காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்று நந்திக்கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 10.00 மணிக்கு குறித்த வள்ளத்தை கரைக்கு கொண்டு வருவதற்காக தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் சென்று காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தில் ஏறியபோது குறித்த வள்ளத்துடன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய ஜெயசீலன் சிலக்சன் என்பவரே காணாமல் போயுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து கடற்படையினர், இராணுவத்தினர், மீனவர்கள் இணைந்து நந்திக்கடல் களப்பில் குறித்த மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.