பாடசாலைகளில் தொடரும் கொரோனா அச்சம்! பெற்றோரின் செயற்பாடுகளால் குழப்பம்

Report Print Vethu Vethu in சமூகம்
630Shares

எஹெலியகொட திவுரும்பிட்டிய ஆடை தொழிற்சாலையில் மேலும் 35 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இந்த தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 180 வரை அதிகரித்ததுள்ளளது.

இதேவேளை, ஹட்டன், கொட்டகல பகுதியிலுள்ள பாடசாலையில் நேற்று மாணவர்களை மீண்டும் வீட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமையினால் ஆசிரியர்கள் 19 பேர் சுகயீன விடுமுறை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மாணவர்கள் வருகைத்தந்திருந்த பாடசாலைகளை கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஹம்பாந்தோட்ட வலஸ்முல்ல மகா வித்தியாலயத்தில் நேற்று பாடசாலை நிறைவடைவதற்கு முன்னர் மாணவர்களை பெற்றோர் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வலஸ்முல்ல, கொஹொலான பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் உறவினரின் மகன் பகுதி நேர வகுப்பிற்கு வருகைத்தந்தமையினால் இவ்வாறு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவன் பாடசாலைக்கு வருகை தந்தமையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.