கிளிநொச்சியில் மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Gokulan Gokulan in சமூகம்
195Shares

கிளிநொச்சி - திருவையாற்றில் கடந்த இரு வாரங்களுக்கு முன் இடம்பெற்ற தாயின் மரண வீட்டிற்கு கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவிலிருந்து வந்த பெண்ணுக்கு அன்றே தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது கணவருக்கு இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்றிரவு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மனைவிக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது கணவருக்கும் இரண்டு வாரங்களுக்கு முன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது தொற்றில்லை என முடிவுகள் வெளிவந்திருந்தன.

ஆனால் 14 நாட்களுக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது நேற்றிரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லேரியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மரண வீட்டுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 20 மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள இக் குடும்பங்களுக்கு மனிதாபிமானமான உதவிகள் தேவைப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.