ஒலுவில் - பாலமுனை பகுதியில் பிடிக்கப்பட்ட சருகுப்புலி

Report Print Gokulan Gokulan in சமூகம்
217Shares

அம்பாறை மாவட்டம் பாலமுனை மையவாடி பின்பகுதியில் சருகுப்புலி ஒன்று பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழும் பகுதியில் நேற்றிரவு சருகுப்புலி உள் நுழைந்து கிராமவாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடியுள்ளது.

இதனை அறிந்த பொதுமக்கள் சிலர் குறித்த சருகுப்புலியை பிடித்து கட்டி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாவட்ட வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.