கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஆங்காங்கே பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைப் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் சுகாதாரத் துறையினரால் இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள கடைகளில் வேலை செய்பவர்கள், தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள், அப்பகுதியைச் சூழவுள்ளவர்கள் என 72 பேருக்கு இதன்போது பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பரிசோதனையின் முடிவுகள் இன்றயதினம் மாலை தெரியவரும் என இதன்போது சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
