வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தரின் உறவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை! அலுவலகத்தில் கிருமி நீக்கல் நடவடிக்கை

Report Print Theesan in சமூகம்
61Shares

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ந.கமலதாசன் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் உறவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்விதமான அபாயகரமான நிலையும் பிரதேச செயலகத்திற்குள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்திற்கு இன்றைய தினம் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு வினவியபோது,

பிரதேச செலயத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரின் ஒருவரின் உறவினருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த உத்தியோகத்தர் பணியாற்றும் பிரதேச செயலகத்தின் அலுவலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நாளைய தினம் கிடைக்கவுள்ளன. இது குறித்து பொதுமக்கள் உத்தியோகத்தர்கள் அச்சமடையத் தேவையில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பிரதேச செயலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெறுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.