வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் தனிமைப்படுத்தலில்

Report Print Thileepan Thileepan in சமூகம்
109Shares

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதான அலுவலகம் இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற திணைக்களத்தின் கலந்துரையாடலுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உயர் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இதன்காரணமாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கமநல அபிவிருத்தி திணைக்கள வவுனியா அலுவலகம் நகரசபையால் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.