திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் ரஷ்யாவுக்கு திரும்பின

Report Print Mubarak in சமூகம்
98Shares

திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த மூன்று ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் நேற்று இலங்கையிலிருந்து ரஷ்யா நோக்கி புறப்பட்டுள்ளன.

வழி நடத்தப்பட்ட ஏவுகணை க்ரூஸர் ரக கப்பலான ´வரியாக்´, நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ´அட்மிரல் பண்டெலேவ்´ மற்றும் நடுத்தர கடல் டேங்கர் ரக கப்பலான "பெச்செங்கா" ஆகிய ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் நவம்பர் 30ஆம் திகதி அன்று திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்தன.

குறித்த கப்பல்கள் எரிபொருள் நிரப்புவதற்காகவும் சிறிது தரித்து நிற்பதற்காகவும் வருகை தந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

எனவே கொவிட் - 19 பரவுவதை கட்டுப்படுத்த வழங்கப்பட்ட சுகாதார பராமரிப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி மீள் நிரப்புதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நாட்டிற்கு வருகை தந்த மூன்று ரஷ்ய கப்பல்களும் திருகோணமலை துறைமுகத்திலிருந்து ரஷ்யா திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.