பெருங்கடலில் வெட்டிவிடப்பட்ட நந்திக்கடல் ஆற்று நீர்

Report Print Vanniyan in சமூகம்
231Shares

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று பெய்த கனமழையின் காரணமாக வட்டுவாகல் நந்திக் கடல் நீர் நிரம்பிக் காணப்படுகிறது.

நந்திக்கடல் ஆறு இவ்வாறு நீர் நிரம்பிக்காணப்படுவதால், வட்டுவாகல் பாலத்தை நீர் மூடும் அபாயம் காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் நந்திக்கடல் ஆற்றினுள் மேலதிகமாகத் தேங்கியுள்ள நீரினை கடலில் வெட்டிவிடும் செயற்பாடு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை,பாரம்பரியமாக விசேட பூசை வழிபாடுகளுடன் குறித்த நந்திக்கடல் ஆற்றில் மேலதிகமாக தேங்கியுள்ள நீர் பெருங்கடலில் வெட்டி விடப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச்செயலாளர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார், கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் உமாமகள் மணிவண்ணன், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சமாசம், சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகள்,மீனவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.