வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்

Report Print Gokulan Gokulan in சமூகம்
1361Shares

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து மீது வீதியின் அருகில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் பேருந்தின் கூரைப்பகுதி சேதமாகியுள்ளது.

கிளிநொச்சி ஏ-9 வீதியில் இன்று மாலை 6.00 மணியளவில் பொது வைத்தியசாலைக்கு முன்பாக இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, மக்கள் பொதுநலன் கருதி வைத்தியசாலையின் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வீதியில் சென்றவர்கள் என பலர் உடனடியாக வீதியை விட்டு மரத்தை அகற்றியிருந்தனர்.