கொரோனா தொற்றாளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வு

Report Print Ajith Ajith in சமூகம்
66Shares

கொரோனா தொற்றாளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை மேற்கொள்வது தொடர்பில் மருத்துவத்துறை நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர்.

இராணுவத்தளபதியும் கொரோனா தடுப்பு நடவடிக்கை நிலையத்தின் தலைவருமான சவேந்திர சில்வாவுடன் இது தொடர்பில் மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர்.

சத்திர சிகிச்சை நிபுணர் மரியா குணசேகர, வைத்திய ஆலோசகர் அர்ஜூன டி சில்வா,குழந்தைகள் சிகிச்சை நிபுணர் ஹேமந்த டொடம்பஹால உட்பட்ட மருத்துவர்களே இது தொடர்பில் சவேந்திர சில்வாவுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இராணுவத் தலைமையத்தில் இது தொடர்பான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டு வரும் நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்காகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விடயம் தொடர்பில் கொரோனா தடுப்பு செயலணியினர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடவுள்ளதாக இராணுவத்தளபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.