கண்டி போகம்பர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த கிராமத்தை முழுமையாக மூடுவதற்கு சுகாதார பிரிவு தீர்மானித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தின் கொரோனா தடுப்பு குழுவினர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் போகம்பர கிராமத்தில் கொரோனா தொற்றாளர்கள் 12 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அதற்கமைய இன்றைய தினம் 50 பேருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.