கண்டி,போகம்பறை பிரதேசத்தில் பொதுமக்களின் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன

Report Print Ajith Ajith in சமூகம்
58Shares

கண்டி,போகம்பறை பிரதேசத்தில் பொதுமக்களின் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பிரதேசத்தில் 13 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்ட பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த 13 பேரையும் சேர்த்து போகம்பறையில் கண்டறியப்பட்ட தொற்றாளிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகள், அக்குரனை பிரதேச சபைக்கு உட்பட்ட 5 பாடசாலைகள் என்பன எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் அறிவித்திருந்தார்.

இந்தப் பாடசாலைகள் எதிர்வரும் 7 ஆம் திகதியன்று திறக்கப்படவிருந்தன.எனினும் கொரோனா பரவல் நிலையில் மாற்றம் இல்லாமையால் பாடசாலைகளை 7ம் திகதி திறப்பது என்ற முடிவு பிற்போடப்பட்டுள்ளது.