பிலியந்தலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி ஒருவர் பலி!

Report Print Murali Murali in சமூகம்
149Shares

இலங்கையில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரையில் 26,290 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.