எல்.பி.எல் போட்டியில் விளையாடும் தமிழ் வீரருக்கு நாமல் விசேட வாழ்த்து

Report Print Kamel Kamel in சமூகம்
1344Shares

லங்கா பிரிமியர் லீக் எனப்படும் எல்.பி.எல் போட்டித் தொடரில் யாழ்ப்பாண அணிக்காக விளையாடும் விஜயகாந்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விசேட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண கழகம் (ஜப்னா ஸ்டேலியன்ஸ்) சார்பில் விளையாடுவதற்கு விஜயகாந்துக்கு வாய்ப்பு கிட்டியமை மகிழ்ச்சிக்குரியது என நாமல் தெரிவித்துள்ளார்.

அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இளம் வீரர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதே இந்த போட்டித் தொடரின் பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜயகாந்துக்கு வாழ்த்துக்கள் என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.