புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

Report Print Sumi in சமூகம்
26Shares

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்க சம்மேளனத்தின் கடற்றொழில் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளனத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புரெவி புயல் காரணமாக வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் 62 சேதமடைந்துள்ளன.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு எங்களுடைய மீனவர்களுக்கு அரசாங்கம் உடனடி நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் கடற்தொழில் அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணங்களை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இலங்கை அரசாங்கத்தின் அல்லது அனர்த்த முகாமைத்துவத்தின் அறிவித்தலை ஏற்று எங்களுடைய படகுகளையும் வீட்டு வாசல் வரைக்கும் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்திருந்தோம்.

கடல் நீர் உட்புகுந்து எங்களுடைய படகுகள் வலைகள் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் பல கோடி ரூபா பெறுமதியான வலைகளையும் மாவட்ட மீனவ சமூகம் இழந்துள்ளது.

படகுகள் காணாமல் போயிருக்கின்றது. பெரும் பகுதிகள் சேதமாக்கப்பட்டு இருக்கின்றது. தங்களுடைய தொழிலை அடுத்த கட்டம் கொண்டு நடத்துவதற்கு எங்களுக்கு மூலதனம் இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது.

அரசாங்கம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் மீனவர்களுக்கு மானியம் அல்லது குறைந்த வட்டியில் எங்களுக்கு கடன் பெறுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்றும் எங்களுடைய தொழிலை நாங்கள் 2021 சிறப்பாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற புயல் காரணமாக யாழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மீனவர்களுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டன. அதில் 62 படகுகள் சேதம் ஆக்கப்பட்டிருக்கிறது ஊர்காவற்றுறை கடற்கரைப் பிரதேசத்தில் ஒரு படகை காணவில்லை வெளியிணைப்பு இயந்திரங்களை சேதமாகி கடலில் மூழ்க பட்டிருக்கின்றது.

வடமராட்சியில் 43 படகுகள் சேதம் ஆக்கப்பட்டிருக்கிறது 6 இயந்திரங்கள் கடலில் மூழ்க பட்டிருக்கின்றது. நெடுந்தீவு பிரதேசத்தில் மூன்று படகுகள் சேதம் ஆக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் அறிவித்தலை ஏற்று மீனவர்கள் தங்களுடைய படகுகளையும் வலைகளையும் பாதுகாப்பு என்று கருதிய இடத்தில் ஏற்றி வைத்திருந்த போதும்இ இவ்வளவும் காணாமல் போயுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்பது என்னவெனில்இ பெரும்பாலான படகுகளுக்கு காப்புறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

காப்புறுதி நிறுவனங்கள் வந்து பார்க்கவில்லை. அதனால் நாங்கள் எங்களுடைய கடற்றொழில் அமைச்சர் அவர்கள் மீனவர்களுக்கான காப்புறுதிகளை நிறுத்தி எங்களை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதியை பெற்றுத்தர வேண்டும்.

இலங்கையின் மீன்பிடி அமைச்சர் அவர்களே தயவு செய்து இந்த காப்புறுதி விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்து இந்த காப்புறுதியை நிறுத்தி உங்களுடைய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அந்த காப்புறுதியை பெற்றுத்தர வேண்டும்.

இனி வரும் புயலுக்கு முன்பதாக நீங்கள் மீனவர்களுக்கு உரிய வாழ்வாதாரத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து எங்களுக்கு இந்த வாழ்வாதாரம் வழங்கிய அடுத்த கட்ட தொழில் முயற்சியை 2021 நாங்கள் கொண்டு செல்வதற்கு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் களை மீனவர்களுக்கு பெற்றுத் தருவதற்கு இலங்கை கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட மீனவர் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.