இலங்கையின் கொரோனா நிலவரம்! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு

Report Print Murali Murali in சமூகம்
214Shares

வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுசுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹெரத் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிப்பதற்கான வசதிகள் இலங்கை அரசாங்கத்திடம் உள்ளதாக கூறியுள்ளார்.

ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களிற்கு முன்னர் நான்கு ஐந்து நோயாளிகளே தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், தற்போது இந்த எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் உண்டாகியுள்ள சவாலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னைய தினம் இலங்கையில் 517 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,290 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், இன்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 406 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 19 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது.