பிணை வழங்க வந்த பெண் திடீரென கீழே விழுந்து மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்
376Shares

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் வரிசையில் நின்ற பெண் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு மோசடியின் சந்தேக நபராக விளக்கமறியலில் உள்ள தனது உறவினருக்கு பிணையாளியாக வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் உயிரிழந்த இந்த பெண் 55 வயதுடைய திருமணம் செய்யாத ஒருவர் என தெரியவந்துள்ளது. அவர் ஆனமடுவ, கரிஹட்டிகுளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

அவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த இடம் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவரது சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

PCR பரிசோதனைகள் மேற்கொள்ளபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.