உறவினர்களால் உரிமை கோரப்படாத சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக ஆலோசனை கோரல்

Report Print Ajith Ajith in சமூகம்
54Shares

கொரோனா வைரஸால் உயிரிழந்த பின்னர் உறவினர்களால் உரிமை கோரப்படாத 19 பேரின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக ஆலோசனை கோரப்பட்டிருக்கிறது.

கொழும்பு மாநகரசபை இந்த ஆலோசனையைக் கோரியிருக்கிறது.

இந்த சடலங்களைத் தொடர்ந்தும் கொழும்பு சவச்சாலையில் நீண்டகாலமாக வைத்திருக்க முடியாது என்ற அடிப்படையிலேயே இந்த ஆலோசனை கோரப்பட்டிருக்கிறது.

இந்த உடலங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களின் ஜனாஸாக்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமது உறவுகளின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ளாத அடிப்படையில் இந்த உடலங்கள் தொடர்ந்தும் கொழும்பு சவச்சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

அதேநேரம் தொடர்ந்தும் கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கமும் மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் அரசு செலவில் இந்த உடலங்களைத் தகனம் செய்வது தொடர்பில் கொழும்பு மாநகரசபை ஆலோசனைகளை எதிர்பார்த்திருக்கிறது.

இதற்கிடையில் இந்த விடயத்தில் சட்ட மா அதிபரின் ஆலோசனை எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.