மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பகுதியில் அதிகரித்து வரும் குரங்குகளின் தொல்லை

Report Print Kumar in சமூகம்
60Shares

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான 35ஆம் கிராமத்திலுள்ள கண்ணபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பொது மக்கள் குரங்கு தொல்லைகளினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

கடந்த காலத்தில் நாங்கள் எல்லை கிராமத்திலிருந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இழப்புகளை கடந்து கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும்போது இரவு வேளைகளில் எங்களின் பயிர்களை யானைகள் சேதப்படுத்துவதுடன் உயிருக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கின்றன. இதற்கான எந்தவிதமான தீர்வுகளும் இற்ற வரைக்கு கிடைக்காத நிலையே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கஷ்டப்பட்டு நிலக்கடலை, சோளம் ஆகியவற்றைப் பயிரிட்டு பராமரித்து வருகின்ற நிலையில் காட்டுக் குரங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம்மாக்கி வருகின்றன.

இந்த குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்களையும் சேதமாக்கி செல்வதுடன், பாடசாலை செல்கின்ற சிறுவர்கள் முதியோர்களையும் அச்சுறுத்தும் நிலை காணப்படுகின்றது.

இரவு வேளைகளில் யானைக்கு பயப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதுடன் பகல் வேளைகளில் குரங்குகளுக்கு பயப்பட்டு பொழுதை கழிப்பதாகவும் எனவே இதற்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.