கண்டி புவி அதிர்வு தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை

Report Print Ajith Ajith in சமூகம்
47Shares

கண்டியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த புவி அதிர்வு தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை என புவி சரிதவியல் மற்றும் அகழ்வாராய்ச்சி பணியகம் அறிவித்திருக்கிறது.

அந்த பணியகத்தின் தலைவரான அநுர வல்பொல இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட நில அதிர்வை பொருத்தவரையில் அது 2 .0 என்ற ரிச்டர் அளவிலேயே இருந்து இருக்கிறது. இது பாதிப்பை தரக்கடிய அதிர்வு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த அதிர்வுகள் தொடர்பாக உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு விஷேட குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவினர் குறித்த நில அதிர்வு தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொண்டு தகவல்களை வெளியிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கண்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சுண்ணாம்புக்கல் அகழ்வுடன் நில அதிர்வுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பில் இந்த குழு தீவிரமாக ஆராயும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை இந்த நில அதிர்வுகள் காரணமாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் எவ்விதமான அச்ச நிலையும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் புவிச்சரிதவியல் மற்றும் ஆராய்ச்சி திணைக்களத்தின் தலைவரான அநுர வல்பொல குறிப்பிட்டிருக்கிறார்.