திருமணத்திற்கு சென்ற கொரோனா நோயாளி - முழுமையாக முடக்கப்பட்ட கிராமம்

Report Print Vethu Vethu in சமூகம்
423Shares

தலவாக்கலயிலுள்ள பகுதியொன்றை முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு பயண கட்டுப்பாடு விதிப்பதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகரபத்தன, எல்வியன் தோட்டத்தின் நோன்பீல்ட் பகுதி முழுமையாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி பல இடங்களில் சுற்றித் திரிந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளதுடன் அதிகளவான மக்களுடன் அவர் நெருங்கி செயற்பட்டுள்ளளார் என கிடைத்த தகவலுக்கமைய சுகாதார பிரிவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த தோட்டத்தில் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பீசீஆர் முடிவுகளின் பின்னர் இது தொடர்பில் மேலதிக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.