கொவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 30000ஆக உயர்வு!

Report Print Kamel Kamel in சமூகம்
99Shares

கொவிட்-19 நோய்த்தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை முப்பதாயிரமாக உயர்வடைந்துள்ளது.

இறுதியாக கிடைக்கப் பெற்ற பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 335 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 30072 ஆக உயர்வடைந்துள்ளது என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இதுவரையில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 694ஆக உயர்வடைந்துள்ளது.

கொவிட் நோய்த்தொற்றுக்கு இலக்காகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21800 என்பதுடன், இதுவரையில் கொவிட் காரணமாக 142 பேர் பலியாகியுள்ளனர்.

கொவிட் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 30000ஐ கடந்த நாடுகளின் வரிசையில் இலங்கை 95ம் நாடாக இணைந்து கொண்டுள்ளது.