வவுனியா - வேலங்குளம் பகுதியில் இனந்தெரியாத குழுவினரின் அட்டகாசம்

Report Print Theesan in சமூகம்
132Shares

வவுனியா - வேலங்குளம் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் கடை மற்றும் வீடுகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா - வேலங்குளம் மற்றும் மடுக்குளம் பகுதியில் நேற்றைய தினம் இரவு 11 மணியளவில் முகமூடி அணிந்த இனந்தெரியாத குழு ஒன்று வீடுகள் மற்றும் கடை ஒன்றினை உடைத்து, வீட்டினுள் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

இதன் போது அப்பிரதேசத்தை சேர்ந்த இரண்டு வீடுகள் மற்றும் ஒரு சிறிய கடை ஒன்றும் இக்குழுவினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை பூவரசங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.