நியாயமற்ற வகையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷானி அபேசேகர உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

Report Print Kamel Kamel in சமூகம்
73Shares

நியாயமற்ற வகையில் தம்மை கைது செய்துள்ளதாக குற்ற விசாரணைப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தற்பொழுது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஷானி அபேசேகர சட்டத்தரணிகள் ஊடாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அடிப்படை உரிமை மீறல் மனுவாக இந்த மனு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நியாயமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவிதமான காரணிகளும் இன்றி தம்மை கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக ஷானி அபேசேகரவின் சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன கைது விவகாரத்தில் சாட்சியங்களை சோடித்தார் என ஷானி மீது குற்றம் சுமத்தி அவரை குற்ற விசாரணைப்பிரிவினர் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.