பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள காணி சீர்திருத்த ஆணைகுழுவுக்கு சொந்தமான காணிகளை, காணிகள் அற்ற பொது மக்களுக்கு பிரித்து வழங்கவேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று காலை 10.00 மணிக்கு நடைபெற்ற சபைக்கூட்டத்தின் போதே இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையின் தவிசாளர் சுப்ரமணியம் சுரேன் தலைமையில் இடம்பெற்ற சபையின் மாதாந்த அமர்வில் சபையின் உறுப்பினர் கோகுல்ராஜினால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது சபையின் அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குறித்த தீர்மானம் உரிய தரப்பிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.