இராவண மன்னனின் வழித்தோன்றல்களின் பண்டைய மருந்து சீட்டுக்களின் குறிப்புக்களைக் கொண்டு கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆயுர்வேத மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிட்டிகல தேவேந்திர என்றழைக்கப்படும் நபர் ஒருவரே இவ்வாறு கொவிட்டிற்கு மருந்து கண்டு பிடித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆயுர்வேத பானி மருந்து ஏற்கனவே பிரபுக்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அதனைப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்நாட்டு மருத்துவ மேம்படுத்தல் அமைச்சர் ஆகியோரின் தலையீட்டின் அடிப்படையில் கொவிட் தொற்றாளிகளுக்கு எதிர்காலத்தில் இந்த மருந்து வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் நோய்த் தொற்று பரவுவதற்கு முன்னதாகவே தாம் இது பற்றி அம்பலப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து மாதங்களாகவே இவ்வாறு கொவிட் நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டு பிடித்துள்ளதாக பலர் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.