அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்
176Shares

மேல் மாகாணத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் ஏனைய பிராந்தியங்களுக்கும் பரவுவதற்கான ஆபத்து இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித்த அலுத்கே இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

மேல் மாகாணத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏனைய பகுதிகளுக்கும் இது பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல் அதிகமாக இருக்கின்றது.

எனவே ஏனைய இடங்களில் கண்டறியப்படும் கொரோனா வைரஸ் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கண்டி, பண்டாரகம, கிழக்கு மாகாணம், புத்தளம் மற்றும் காலி போன்ற இடங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த நிலையில் எதிர்வரும் பண்டிகை காலத்தை மக்கள் பொறுப்புடன் கொண்டாட வேண்டும் வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.