கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 14 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரோனா நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் இதுவரை 22,831 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 146 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.