கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய உண்டியலை உடைத்து பெருந்தொகை பணம் திருட்டு

Report Print Yathu in சமூகம்
66Shares

கிளிநொச்சி - கந்தசுவாமி ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சி ஏ9 வீதிக்கு அருகிலிருக்கும் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் உண்டியலின் பூட்டை உடைத்து குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உண்டியலில் இருந்த பெருந்தொகையான பணம் திருடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இத் திருட்டு தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.