பிள்ளையான் எங்களை சுட்டுக் கொலை செய்துவிடுவார் - பிரதேச சபை உறுப்பினர் ஆதங்கம்

Report Print Navoj in சமூகம்
197Shares

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) மாறப்போவதில்லை. பிள்ளையானின் செயற்பாடு இதுதான் என வாழைச்சேனை பிரதேச சபையின் தமிழ் தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் கு.குணசேகரன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இரண்டு சபை உறுப்பினர் விளக்கமறியலில் உள்ள நிலையில் எதிர்தரப்பினர் சபையை நடாத்தக் கூடாது என்று சபை மண்டப நுழைவாயிலை மூடி போராட்டம் நடாத்தியதை தாண்டி வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் நிமிர்த்தம் தனக்கு அச்சுறுத்தல் உள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) மாறப்போவதில்லை. பிள்ளையானின் செயற்பாடு இதுதான். இவரது சபை உறுப்பினர்கள் என்னை தனியாக பார்த்துக் கொள்வதாக கூறிகின்றார்கள். பரவாயில்லை நன்றாக பாருங்கள். சபை உறுப்பினர் மணி நீங்கள் அச்சப்பட வேண்டாம் உங்கள் பிள்ளையான் அண்ணன் இருக்கிறார் காவல் துறை, ஆதரவாளர்கள், அட்டூழியத்துடன், ஆயுதப்படையுடன் வருவார், எங்களை அச்சுறுத்துவார், எங்களை சுட்டுக் கொலை செய்வார்.

நாங்கள் இறப்பதற்கு பயப்படுவதில்லை. பிள்ளையான் நினைத்துக் கொள்ள வேண்டும் சபையை வெற்றி பெற்றுவிட்டாய் என்று. நீர் ஒரு மான்பற்றவன். மக்கள் மாண்பானவன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தந்தார்கள். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவியும் கிடைத்தது. ஆனால் நம்பிய மக்களை கைவிட்டுவிட்டார்.

எங்களுக்கு அட்டகாசம் காட்டி சென்றார் பிள்ளையான். பிள்ளையானை போன்று கேவலமான செயற்பாடு எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரிடமும் இல்லை. தவிசாளர் சோபா ஒரு நாடகம் இது திட்டமிட்டு நடந்த சதி என்று கூறியுள்ளார்.