முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் விடுதி மீது கல்வீச்சு தாக்குதல்!

Report Print Yathu in சமூகம்
94Shares

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் விடுதி மீது நேற்று இரவு விசமிகளால் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படுகின்ற மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் பிரதேச செயலாளர் தங்கியிருக்கின்ற விடுதியின் கூரை மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், விடுதி நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கிய போது பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

குறித்த பிரதேசத்தில் பல்வேறுபட்ட கஸ்டங்களுக்கு மத்தியிலும், ஆளனி பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் மக்களுக்காகச் சேவையாற்றி வருகின்ற அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும், இது தொடர்பில் பிரதேச பொது அமைப்புக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.