இலங்கைக்குள் இன்று 536 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் 461 பேர் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளானவர்களிடம் இருந்தும், 75 பேர் சிறைச்சாலை தொற்று இணைப்பில் இருந்தும் கண்டறியப்பட்டதாக இலங்கையின் இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
இந்த கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வை அடுத்து இலங்கையில் இதுவரையில் கொரோனாவினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆயிரத்து 149ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8ஆயிரத்து172ஆக உயர்ந்துள்ளது. 22ஆயிரத்து 831பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.