இலங்கையில் கொரோனா மரணம் 147 ஆக அதிகரிப்பு!

Report Print Rakesh in சமூகம்
97Shares

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கொரோனாத் தொற்றால் இறுதியாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு - 13 ஐச் சேர்ந்த 82 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், கொரோனாத் தொற்றுக்குள்ளாகிய நிலையில், முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முல்லேரியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இரத்த அழுத்தம், நியூமோனியாவுடனான கொரோனாத் தொற்றே இந்த உயிரிழப்புக்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.