வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு

Report Print Kanmani in சமூகம்
515Shares

பாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கு பயன்படுத்தும் வெண்ணைக்கு அறவிடப்பட்ட வரி 400 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் வெண்ணைகளுக்கு அரசாங்கத்தினால் இதுவரை 200 ரூபா வரி அறிவிடப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த வரியானது 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.