கன்னியா வெந்நீரூற்று அருகே இந்து ஆலயம் அமைக்க அனுமதி!

Report Print Murali Murali in சமூகம்
807Shares

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோயில் இருந்த பகுதியில் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மேல் நீதிமன்றில் இன்று இணக்கம் காணப்பட்டது.

நீதிபதி எம் .இளஞ்செழியன் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இணக்கம் காணப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் கோயில் கட்டுவதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் எனினும் அந்த நிலத்தில் கோயில் கட்டும் நிலையத்தை தங்கள் தரப்பே காட்டும் என்றும் அரச தரப்பில் முன்னிலையான சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி ஆப்ரூ தெரிவித்தார்.

ஆனால் அதனை மனுதாரா் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் ஆட்சேபித்தார்.

இதேவேளை கன்னியா வெந்நீரூற்று அருகே பிள்ளையார் ஆலய அத்திபாரம் ஒன்று இருந்து அதை தொல்பொருள் திணைக்களம் உடைத்ததாக கடந்த ஆண்டு சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Like This Video...