வயல்களில் நிறைந்து காணப்படும் வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மன்னார் விவசாயிகள்

Report Print Ashik in சமூகம்
64Shares

வடக்கு, கிழக்கு மாகாணங்களை அச்சுறுத்திய 'புரேவி' புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் பெரும்போக பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் பிரதான வாய்க்கால்களில் தொடர்ச்சியாக நீர் வழிந்து செல்வதாலும் இடையிடையே மழை பெய்து கொண்டிருப்பதாலும் வயல்களில் தேங்கியிருக்கும் நீர் வெளியேற முடியாமல் தேங்கியுள்ள நிலையில் காணப்பட்டதோடு, வாய்க்கால்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

இதனால் வயல் நிலங்களில் காணப்படும் நீரை வெளியேற்றும் வகையில் வாய்க்கால் துப்பரவு செய்யப்பட்டு, இயந்திரங்கள் மூலம் நீரை இரைத்து வெளியேற்றி பயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில் மன்னார் விவசாயிகள் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.