அக்கரைப்பற்று சந்தை கொத்தணி 400 ஐ தாண்டியது! மேலும் 21 பேருக்கு தொற்று உறுதி!

Report Print Gokulan Gokulan in சமூகம்
84Shares

அக்கரைப்பற்று சந்தை கொத்தணி ஊடாக கொரோனா தொற்றுக்களானவர்கள் நேற்று இரவு 11.48 மணி வரையிலான 12 மணித்தியாலத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மூலம் புதிதாக 21 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அக்கரைப்பற்று சந்தை கொத்தணி 411 ஆக அதிகரித்துள்ளதுடன் கிழக்கில் 588 ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள கொரோனா பிரிவின் நேற்று இரவு 11.48 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம்,

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா கொத்தனையையடுத்து அக்கரைப்பற்று சந்தை கொத்தணியில் இருந்து நேற்று திங்கட்கிழமை இரவு 11.48 மணி வரையிலான 12 மணித்தியாலயத்தில் காரைதீவில் ஒருவரும், நிந்தவூரில் ஒருவரும், சாய்ந்தமருதில் ஒருவரும், அட்டாளைச்சேனையில் ஒருவரும், பொத்துவிலில் 12 பேரும் சம்மாந்துறையில் 3 பேரும், இறக்காமத்தில் 2 பேருமாக 21 பேர் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளனர் .

கிழக்கு மாகாணத்தில் 4 சுகாதார பிராந்தியங்களான மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 98 பேருக்கும், திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 18பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 20பேருக்கும், கல்முனை சுகாதார பிரிவில் 452 பேருமாக 588 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் கிழக்கு மாகாணத்தில் 21629 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் என்ரெயன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய 3 பிரதேச செயலகப்பிரிவுகளும் மற்றும் மாளிகைக்கடு கிழக்கு பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.