இந்திய இழுவைப்படகை கட்டுப்படுத்த கோரி கிளிநொச்சியிலும் போராட்டம்

Report Print Yathu in சமூகம்
25Shares

இந்திய இழுவைப்படகை கட்டுப்படுத்த கோரி கிளிநொச்சியிலும் போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், கிளிநொச்சி அரும்பு மாவட்ட பெண்கள் அமைப்பு, கிளிநொச்சி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் இணைவில் குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமான கவன ஈர்ப்பு பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றுள்ளது.

அங்கு தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான மகஜரொன்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.